ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர். அவரிடம் தொழில் கற்றுக் கொண்ட பிறகே, 'டிமான்டி காலனி' படத்தை இயக்கினார்.
அவர் அடுத்து இயக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வில்லன் நடிகருக்கான தேர்வு நடைபெற்றபோது, பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வரும் அனுராக் காஷ்யாப் பெயரை ஏ.ஆர்.முருகதாஸ் சிபாரிசு செய்திருக்கிறார்.
அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமல் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அனுராக் காஷ்யாப்பை வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டனர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகிறார் அனுராக் காஷ்யாப். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான 'அகிரா' படத்தில் கருணையற்ற ஒரு போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தார். அந்த அடிப்படையில்தான் இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் வேடத்துக்கு அனுராக் காஷ்யாப்பை சிபாரிசு செய்திருக்கிறார் முருகதாஸ்.