ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கார்த்தி, நடிகையர் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம், காஷ்மோரா. தீபாவளிக்கு வெளியாகும், இப்படத்தின் இசை, முன்னோட்டம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. விழாவில், கார்த்தி, ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் கோகுல் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை.
விழாவில், நடிகர் கார்த்தி பேசியதாவது: காஷ்மோரா கதாபாத்திரம், இயக்குனர் கோகுலின் கடும் உழைப்பால் உருவானது. பாகுபலி படத்தை பார்த்த போது, நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லையே என, வருத்தப்பட்டது உண்டு. இப்படம் ஜாலியான படம்; நடிகர் விவேக், முதன்முறையாக, என் அப்பாவாக நடித்துள்ளார். பையா படத்தில், நான் நயன்தாராவுடன் நடிக்க வேண்டியது. ஆனால், அதற்கான வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. இப்படத்தில், காதல் கிடையாது; குடும்பங்கள் கொண்டாடும்.இவ்வாறு அவர் கூறினார்.