14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சந்தானம் ஹீரோவான பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் சூரி. ஆனால் அவருக்கு அடுத்தபடியாக மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு போன்றோர்களும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாம்தட்டு நடிகர்களின் படங்களாக நடித்து வரும் இவர்கள் இருவரும் தற்போது தலா 12 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் அவுட்டோர்களில் பிசியாக இருப்பதால் சில படங்களில் டப்பிங் வேலைகள் அவர்களுக்காக வெயிட்டிங்கில் உள்ளன.
இந்த நிலையில், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகிய இருவரும் தற்போது சில படங்களில் காமெடி கூட்டணி வைத்துள்ளனர். அதோடு, படம் முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழக்கூடிய அளவுக்கு காமெடிக்கு கியாரண்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பாட்டில் டைரக்டர்கள் கொடுக்கும் காமெடி காட்சிகளை உடனுக்குடன் மெருகேற்றி நடித்து வருகிறார்கள். சில காட்சிகளில் நடித்தது திருப்தி இல்லாதபட்சத்தில் அதிக நேரம் எடுத்துக்கொண்டும் நடித்துக் கொடுத்து வருகிறார்கள்.