ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பூஜா ஹெக்டே யார் என்று நம் ரசிகர்கள் இன்னமும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மூன்று காட்சிகள் கூட முழுதாக பல ஊர்களில் ஓடாத படமாக அமைந்த படம் அது. அந்தப் படத்தின் அறிமுக நாயகி பூஜா ஹெக்டே அழகானவராக இருந்ததால்தான் அவருக்கு காலம் கொஞ்சம் கடந்த பின்னும் ஹிந்தியில் பெரும் வாய்ப்பைக் கொடுத்தது.
அஷுதோஷ் கௌரிக்கர் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக 'மொகஞ்சதாரோ' படத்தில் அறிமுகமானார் பூஜா. ஆகஸ்ட் மாதம் வெளிவந்த இந்தப் படம் பெரும் தோல்விப் படமாக அமைந்தது. தெலுங்கு, தமிழை அடுத்து ஹிந்தியில் வந்த வாய்ப்பையாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என நினைத்தவருக்குப் பேரிடி விழுந்தது. இருந்தாலும் பூஜாவைத் தேடி மற்றுமொரு வாய்ப்பு வந்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மகதீரா' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இந்தப் படத்தில் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்கலாம் என படக் குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
பூஜாவை நடிக்க வைக்கும் போது படத்தின் பெயரை மட்டும் 'எம்' எழுத்தில் ஆரம்பமாகும்படி வைக்காதீர்கள். தமிழில் 'முகமூடி', ஹிந்தியில் 'மொகஞ்சதாரோ' என 'எம்' சென்டிமென்ட் பூஜாவுக்கு சரிவரவில்லை.