சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கவுண்டமணி நாயகனாக நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் இளவட்ட நாயகனாக நடித்தவர் செளந்திரராஜா. அதற்கு முன்பு, சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்த இவர், தற்போது நாயகன் அந்தஸ்தை எட்டியுள்ளார். ஆனபோதும், இந்த நேரத்தில் தங்கரதம் என்ற படத்தில் அவர் அதிரடி வில்லனாகவும் உருவெடுத் துள்ளார்.
மேலும், இந்த தங்கரதம் படத்தில் பா.விஜய் நடித்த ஸ்ட்ராபெர்ரி படத்தில் வில்லனாக நடித்த வெற்றி நாயகனாக நடித்து வருகிறார். கதைப்படி லாரி டிரைவராக நடித்து வரும், அவருக்கும் செளந்திரராஜாவுக்கும் ஏற்படும் மோதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் செளந்திரராஜாவை அதிரடியான வில்லனாகவும் வெளிப்படுத்துகிறதாம். அந்த வகையில், இந்த படத்திற்கு பிறகு அவர் அதிரடியான வில்லனாக பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள்.