ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி 2' படம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பலவிதமான தகவல்கள் உலவி வந்தன. அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழுவினர் நேற்று ஐதராபாத்தில் தெலுங்கு மீடியாவைச் சந்தித்து படம் பற்றிய 'அப்டேட்' தகவல்களைத் தெரிவித்தனர்.
பாகுபலி 2 படத்தின் டைட்டில் நேற்று வெளியிடப்பட்டது.
பாகுபலி 2 படத்தின் டிரைலர் ஜனவரி 2017ல் வெளியாக உள்ளது.
படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் டிசம்பர், 2016க்குள் முடிந்துவிடும்.
அக்டோபர் 22ம் தேதி 'பாகுபலி 2' படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளது.
அன்றைய தினம் பாகுபலி கார்ட்டுன் புத்தகமும் வெளியாகப் போகிறது.
அக்டோபர் 5ம் தேதி தென்னிந்தியத் திரையுலகம் வியக்கும் அளவிற்கு, பிரபாஸ் ரசிகர்கள் மகிழும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வெளியாகப் போகிறது.
பாகுபலி அனிமேஷன் படம்-ன் அமேசான் பிரைம்-ல் வெளியாகிறது. இதன் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது.
இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்கு அதிக காட்சிகள் இல்லை. முற்றிலும் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமிருக்கும்.
இன்னும் இரண்டு பாடல் காட்சிகள், ஒரு சண்டைக் காட்சி, சில சேர்க்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டுமே படமாக வேண்டி உள்ளது.
டிசம்பர் 2016 முதல் 'பாகுபலி' நட்சத்திரங்கள் 'ஃப்ரீ' ஆகி விடலாம்.
ஏப்ரல் 2017ம் ஆண்டு இரண்டாம் பாகத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.