விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாலிவுட்டின் பிக் பி நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள், உலகி அழகி, பாலிவுட்டின் முன்னணி நடிகை என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் ஐஸ்வர்யா ராய், இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‛ஏ தில் ஹே முஷ்கில்'படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவருடன் நடிகர் ரன்பீர் மற்றும் அனுஷ்கா சர்மாவும் லீடு ரோலில் நடித்து உள்ளனர். இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட காலமாக பிரபல அழகுசாதன பொருட்களின் விளம்பரம் தூதராக இருத்து வருகிறார். தற்போது இவரை மாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக பிரியங்கா சோப்ராவை விளம்பர தூதராக்க எண்ணியுள்ளது.
இதுப்பற்றி விசாரித்ததில், ஐஸ்வர்யாவிற்கு வயதாகிவிட்ட காரணத்தினாலும், பிரியங்கா ஹாலிவுட் வரை சென்றிருப்பதால் அவரை நடிக்க வைத்தால் தங்கள் நிறுவன பொருட்கள் ஹாலிவுட் அளவுக்கு பிரபலமாகும் என்பதால் பிரியங்காவை நடிக்க வைக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‛ஏ தில் ஹே முஷ்கில்', படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.