ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள தேவி படம் அக்டோபர் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் மூன்று மொழிகளிலுமே பிரபுதேவா-தமன்னாதான் ஜோடியாக நடித்துள்ளனர். ஆனால்,காமெடியன்கள் மற்றும் கேரக்டர் நடிகர் நடிகையர் அந்தந்த மொழிகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக,இந்தி பதிப்பில் சோனு சூட்டும் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். அதோடு இந்தி பதிப்பை அவரும் தயாரிப்பில் கைகொடுத்திருப்பதோடு தானே ரிலீஸ் செய்கிறாராம்.
அதோடு, ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டு ஒரு மொழியில் உருவான படத்தை திட்டமிட்டபடி முடிப்பதே கடினமான விசயம். ஆனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இறுதிகட்ட பணிகளை நடத்தி வருகிறார் ஏ.எல்.விஜய். அதன்காரணமாக, கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவரது டைரக்சன் யூனிட் இரவு பகலாக தூங்காமல் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இதுவரை சில மூன்று மொழிப்படங்கள் வெளியானபோதும், மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் எந்த படமும் திரைக்கு வந்ததில்லையாம். அந்தவகையில், தேவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அக்டோபர் 7-ந்தேதி ரிலீசாகி இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்போகிறதாம்