ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரமாண்ட படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால் மணிரத்னம், ஷங்கர் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் ரெமோ உருவாகியிருக்கிறது. அதோடு இந்த படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண் வேடத்திற்காக அதிக ரிஸ்க் எடுத்து நடித்த சிவகார்த்திகேயன், படம் அக்டோபர் 7-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்டதால், அதிலும் பிரமாண்டம் காட்டப்போகிறாராம்.
அதாவது, விஜய், அஜித், சூர்யா போன்ற மெகா நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது எப்படி உலக அளவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறதோ அதே அளவுக்கு இந்த படத்தையும் வெளியிடப்போகிறாராம். முன்னதாக, ரெமோ படத்திற்கான பேனர், கட்அவுட் என அதிரடியான விளம்பரங்கள் செய்து பரபரப்பு கூட்ட முடிவு செய்துள்ள சிவகார்த்திகேயன், இந்த படம் மூலம் 100 கோடி வசூல் நாயகன் பட்டியலில் தானும் இடம் பிடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம்.