ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஷோலோ காமெடியனாக கலக்கியவர் வைகைப்புயல் வடிவேலு. ஆனால் மார்க்கெட் ஸ்டெடியாக இருந்தபோதே, திடுதிப்பென்று சில ஆண்டுகளாக நடிப்பை விட்டு விலகியிருந்த அவர், இனிமேல் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று தெனாலிராமன், எலி படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. விளைவு, தற்போது மறுபடியும் காமெடியனாக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில், தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் தனக்கு சூப்பர் காமெடி ரோலை கொடுத்த சுராஜ் இயக்கியுள்ள கத்திச்சண்டை படத்தில் காமெடியனாக மறுபிரவேசம் செய்துள்ள அவர், அதையடுத்து லாரன்சுடன் சிவ லிங்காவில் நடித்துள்ளார். அதன்பிறகு ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
ஆனால், கத்திச்சண்டை படத்தில் மனோதத்துவ மருத்துவராக நடித்துள்ள வடிவேலு, சிவலிங்காவில் படம் முழுக்க லாரன்சுடன் நடிக்கும் காமெடியனாகியிருக்கிறார். அதாவது சுறா படத்தில் விஜய்யுடன் நடித்தாரே அந்த மாதிரி படம் முழுக்க வருகிறாராம். அதோடு தன்னிடம் கால்சீட் கேட்கும் டைரக்டர்களிடம் சுறா படத்தை சொல்லி, இந்த மாதிரி படம் முழுக்க ஹீரோவுடன் நான் வரவேண்டும். கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ போன்று அந்த வேடம் இருக் க வேண்டும் என்கிறார். அதனால், இனிமேல் வடிவேலு நடிக்கும் படங்களில் காமெடி ட்ரேக் என்பது தனியாக இல்லாமல், படம் முழுக்க ஹீரோவுடன் இணைந்து அவர் நடிக்கும் காமெடி காட்சிகளே இடம்பெறும் என்று தெரிகிறது. ஆக, மீண்டும் முதல்ல இருந்து என்பது போல் வடிவேலு தனது ஆட்டத்தை ஆரம்பித்திருப்பதால், வளர்ந்து கொண்டிருக்கும் இளவட்ட காமெடியன்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.