பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
1994ல் தான் நடித்த தேவா படத்தில் இருந்தே பின்னணி பாடி வருகிறார் விஜய். அவ்வப்போது தனது படங்களில் ஒரு பாடல் என பாடி வந்தவர், 2005ல் நடித்த சச்சின் படத்துக்கு பிறகு பாடுவதை நிறுத்திக்கொண்டார். பின்னர்2012ல் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் மூலம் மீண்டும் பின்னணி பாடுவதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், துப்பாக்கியைத் தொடர்ந்து, தலைவாவில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி, கத்தியில் செல்பிபுள்ள, புலியில் ஏன்டி ஏன்டி, தெறியில் செல்லக்குட்டி என அவர் பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாகி வருகின்றன.
அதனால், இனிமேல் தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள விஜய், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் பைரவா படத்திலும் சந்தோஷ்நாராயணன் இசையில் ஒரு காதல் பாட்டு பாடுகிறார். இந்த பாடலின் டியூனும் இளைஞர்கள் எளிதில் பாடும் வகையில் உருவாகியுள்ளதாம். குறிப்பாக, விஜய் பாடுவது மற்ற பாடகர் கள் மாதிரி இல்லாமல் சாதாரண ரசிகர்கள் கேட்டதும் பாடும் வகையில் இருப்பதால், அதுதான் அவரது பாடல்களின் ஹிட் ரகசியம் என்று கூறி அதற்கேற்ப பைரவா படத்தில் ஒரு டியூனை விஜய்யின் குரலுக்கேற்ப ரெடி பண்ணியிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன்.