ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். சில தினங்களுக்கு முன் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான படம் அகிரா. இப்படம் சோனாக்ஷிக்கு எதிர்பார்த்த வெற்றியை பாக்ஸ் ஆபிஸில் தரவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் சோனாக்ஷியிடம், தங்கள் தந்தையை பற்றி எடுக்க இருக்கும் சுயசரிதையில் உங்கள் தந்தையாக யார் நடித்தால் சரியாக இருக்கும் என்று கேட்டனர்.
இதைப்பற்றி சோனாக்ஷி கூறியதாவது...."என் தந்தை போல் ஆற்றலும், ஆளுமையும் கொண்டவராக இதுவரை யாரும் அமையவில்லை.இருப்பினும் என்னை பொறுத்தவரை ரன்வீர் சிங் என் தந்தை வேடத்தில் நடிக்க பொறுத்தமாக இருப்பார் என்று கூறுவேன். ரன்வீர் நடித்தால் அது பார்ப்பதற்கு நேர்மையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஏனென்றால் ரன்வீருடன் இணைந்து ‛லூட்ர' படத்தில் நடித்துள்ளேன். அந்தப்படத்தில் அவர் நடிப்பை பார்த்து நான் வியந்துவிட்டேன் "என்றார்.
சோனாக்ஷி சின்ஹா தற்போது நடித்து வரும் படம் போர்ஸ்-2 . இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.