ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடநாட்டுக்காரார் போன்ற தோற்றத்தில் இருந்தாலும் பக்காக பொள்ளாச்சி ஆளு ஹரிஷ் உத்தமன். விமானத்தில் கேபின் குரூவாக (பைலட்டின் உதவியாளர்) பணியாற்றி விட்டு சினிமா மீதுள்ள ஆசையில் சினிமாவுக்கு வந்தவர், பாண்டியநாடு, தனி ஒருவன் உள்பட இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நேற்று வெளியான தொடரி படத்தில் தனுசுடன் மோதும் டெரர் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர றெக்க, ரூபாய் படங்களில் நடித்து வருகிறார். மூன்று தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறர். மாயா படத்தில் நயன்தாராவுடன் ஆரி நடித்தது போன்று டோரா படத்தில் நயன்தாராவுடன் ஹரீஷ் நடித்து வருகிறார்.
"நயன்தாராவுக்கு நீங்கதான் ஜோடியாமே?" என்று கேட்டால் மனஷன் பதறிப்போகிறார்.
"நயன்தாராவுக்கு ஜோடியா நடிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அவுங்க லெவல் வேற, நம்ம லெவல் வேற அவுங்களுக்கு ஜோடியா நடிக்கிற அளவிற்கு வளரணும்னு பிரார்த்தனை பண்ணிக்கலாம். மற்றபடி அவர் படத்தில் நடிக்கிறேன் என்பதுதான் பெரிய விஷயம். படம் முழுக்க அவருக்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்துகிட்டே இருக்கும். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இதுக்குமேல இதை பற்றிச் சொல்ல முடியாது.
தொடர்ந்து வில்லனாக நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. ஏன்னா எனக்கு அவ்வளவு சீக்கிரம் அழுகை வராது. வில்லன்னா அழவேண்டியதில்லை. அதுக்காக வில்லனாத்தான் நடிப்பேன் என்று அர்த்தமில்லை. எந்த கேரக்டராக இருந்தாலும் வந்தோம் போனோம்னு இல்லாம கனமா இருக்கணும். சில பேர் ஹீரோவா நடிக்க கேட்டு வந்தாங்க. கதைய முழுசா கேட்டுவிட்டு அதுல குறிப்பிட்ட கேரக்டரை நான் பண்றேன். ஹீரோவுக்கு வேறு யாரையாவது பாருங்கன்னு அனுப்பி வச்சிட்டேன் என்கிறார் ஹரீஷ் உத்தமன்.