Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

க்யூட் ஆல்பத்தை சுற்றலில் விட்ட சுனைனா

22 செப், 2016 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Sunaina-released-a-new-cute-album

காதலில் விழுந்தேன் படத்தில் தமிழுக்கு வந்த சுனைனா, அதன்பிறகு அடுத்தடுத்து சில படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் அப்படி நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் திருத்தணி, நீர்ப்பறவை, வன்மம், நம்பியார் என பல படங்களில் நடித்து வந்தவரின் மார்க்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேக்கநிலை நிலவுகிறது. ஆனபோதும் விடாமுயற்சி காரணமாக தற்போது ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் சுனைனா.

இதையடுத்தும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கும் சுனைனா, முன்பை விட உடல்பெருத்து, பொலிவு குறைந்து காணப்படுவதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுனைனா, தன் மீதான அதிருப்தியை மாற்றும் வகையில், மாடர்ன் கெட்டப்பில் எடுத்த ஒரு அதிரடியான க்யூட் ஆல்பத்தை தற்போது சில டைரக்டர்களின் பார்வைக்கு சுற்றலில் விட்டுள்ளார். அதோடு, சினிமாவில் பிசியாக இல்லாதபோதும், உடம்பை பராமரிக்க நான் எப்போதுமே தவறியதில்லை. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று எப்போதும் அழகை பேணி பாதுகாத்து வருகிறேன் என்றும் நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் சுனைனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in