ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெமோ படம் வெளியாகும் வரை, அந்த படத்தை பற்றி, பரபரப்பாக ஏதாவது ஒரு செய்தி கசிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த படத்தில், சிவகார்த்திகேயன், நர்ஸ் போல், வேடமிட்டு நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இப்போது, மேலும் ஒரு செய்தி கசிந்துள்ளது. ஹாலிவுட் நடிகை, மறைந்த மர்லின் மன்றோவின் ஒரு புகைப்படம், உலகம் முழுவதும் பிரபலம். அவரது உடை, காற்றில் பறப்பது போலவும், அதை, அவர் இரண்டு கைகளாலும் அமுக்கி பிடிப்பது போலவும், அந்த புகைப்படம் இருக்கும். சிவகார்த்திகேயனும், ரெமோ படத்தில் அதுபோன்ற ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். 1982ல் வெளியான, டூட்ஸி என்ற ஹாலிவுட் படத்தை, 'சுட்டு' ரெமொ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.