ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் குயினாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது ஹன்சல் மேத்தா இயக்கத்தில் ‛சிம்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ரங்கூன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யாப், நடிகை கங்கனாவை தனது அடுத்தப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் கங்கனாவை சந்தித்து தனது கதையை சொல்லியிருக்கிறார் அனுராக், கங்கனாவும் கதையை கேட்டு பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார், ஆனால் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. கால்ஷீட் உள்ளிட்ட பிற விஷயங்களை எல்லாம் பார்த்துவிட்டு இப்படத்திற்கு ஓகே சொல்வார் என தெரிகிறது. விரைவில் இருவரும் இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.