ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். இதில் சூர்யாவும் விதிவிலக்கில்லை. என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டத்தையும் நம்ப தவறுவதில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'சிங்கம்' 3 ஆம் பாகமான எஸ்-3 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவும் மூன்றாம் பாகத்தில் இருக்கிறார். கூடவே ஸ்ருதிஹாசனும் சூர்யாவோடு இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் செய்தி பரவியது.
இந்நிலையில், 'சிங்கம் 3' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை நேற்று அறிவித்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அதாவது, 'எஸ் 3' படம் கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரம் முன்பாக டிசம்பர் 16 (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை டிக் பண்ணியது சூர்யாதானாம். அவருக்கு ராசியான மாதம் டிசம்பராம்.
ஏற்கெனவே சூர்யா நடித்து வெளிவந்து வெற்றியடைந்த 'ஆறு' படம் டிசம்பர் 9 அன்று வெளியாகியது. அமீர் இயக்கத்தில் நடித்த 'மௌனம் பேசியதே' டிசம்பர் 13 அன்று வெளியாகியது. டிசம்பர் ரிலீஸ் என்றால் தனக்கு வெற்றி உறுதி என்ற அடிப்படையில் டிசம்பர் மாதத்தை செலக்ட் பண்ணினாராம் சூர்யா.