ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், ‛முகமூடி' படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வி அடையவே ராசியில்லாத நடிகையானார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் மொகஞ்சதரோ படத்தில் நடித்தார். அந்தப்படமும் தோல்வி அடைய அங்கும் ராசியில்லாத நடிகையானார். இருப்பினும் அவருக்கு மீண்டும் ஒரு பாலிவுட் வாய்ப்பு வந்துள்ளது.
பிரபல விளம்பர பட இயக்குநர் பியரி டிம்மின்ஸ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பர்கான் அக்தரும், ரித்தேஷ் சித்வானியும் தயாரிக்கிறார்கள். நடிகர் சூரஜ் பஞ்சோலி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் அவர் கால்பந்து வீரராக நடிக்கிறார். இந்தப்படத்தில் சூரஜ் ஜோடியாக அவரது காதலியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். சூரஜ், பூஜா இருவருக்கும் இது இரண்டாவது படம் என்பதால் மிகவும் அதிக ஈடுபாட்டோடு நடிக்க உள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.