ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. முதல் இரண்டு படத்தில் கைநழுவிய வெற்றியை இதில் எப்படியாவது பிடித்தே தீருவது என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் என ஒரு பட்டாளத்தையை களத்தில் இறக்கி இருக்கிறார்.
கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு விசயம் பாக்கி இருக்கிறது. அது ராஜேஷ் படத்துக்கே உரிய ஸ்பெஷல். அவருடைய எல்லா படத்துலேயும் ஒரு முக்கியமான ஹீரோ கிளைமாக்ஸில் எண்ட்ரி கொடுத்து பிரச்சினையை முடித்து வைப்பார்.
சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா வந்தார், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவா வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் மீண்டும் ஆர்யா வந்தார். இப்படி அவரது படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஹீரோக்கள் வருவார்கள். கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சந்தானம் வருவார் என்று தெரிகிறது. இதற்காக ராஜேஷ், சந்தானத்திடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அவர் இப்போது ஹீரோவாகி விட்டதால் அந்த வாய்ப்பு. இந்தப் படத்துக்கு பிறகு ராஜேஷின் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கலாம் என்கிறார்கள்.