Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இருமுகன்' வெற்றி, நயன்தாராவின் ராசிதான் காரணம் ?

18 செப், 2016 - 15:57 IST
எழுத்தின் அளவு:
is-the-success-of-irumugan-was--in-the-hands-of-nayanthara

'இருமுகன்' படம் கடந்த பத்து நாட்களாகவே நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிகிக்கின்றன. வழக்கமான மசாலாப் படமாக இருந்தாலும் படத்தின் 'மேக்கிங்'கிலும், விக்ரமின் நடிப்பிலும் படம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது என்கிறார்கள். அதே சமயம், திரையுலகத்தில் அதிகம் பார்க்கப்படும் ராசி சென்டிமென்ட்டும் இந்தப் படத்தில் 'வொர்க் அவுட்' ஆகிவிட்டது என்கிறார்கள். அந்த ராசி சென்டிமென்ட் நயன்தாரா தான் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு காலத்தில் விக்ரமிற்கும், நயன்தாராவிற்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் இனி, விக்ரமுடன் நடிக்கவே மாட்டேன் என தனி சபதம் எடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால், 'இருமுகன்' படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ் மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் எப்படியோ அவரை 'கன்வின்ஸ்' செய்து விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்தார். நயன்தாராவின் தொடர் வெற்றி ராசி படத்தையும் தற்போது வெற்றி பெற வைத்துவிட்டது.


நயன்தாரா நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களான ''திருநாள், இது நம்ம ஆளு, நானும் ரௌடிதான், மாயா, தனி ஒருவன்” ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்பதை பலரும் பேசி வந்தனர். அந்த ராசிதான் 'பத்து எண்றதுக்குள்ள' என்ற தோல்விலியிருந்து விக்ரமையும், 'கெத்து, நண்பேன்டா' தோல்வியிலிருந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜையும் காப்பாற்றிவிட்டது என்கிறார்கள். இன்னும் யார் யாருக்கெல்லாம் நயன்தாராவின் ராசி திருப்புமுனையைத் தரப் போகிறதோ...?.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in