ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‛பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாட்னா டைட்ஸ். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து ஆர்யாவுடன் ஒரு படம், தெலுங்கில் வெங்கடேஷ் உடன் ஒரு படம் என வாய்ப்புகள் வந்தது. சாட்னாவும் நடிப்பதாக இருந்தார். ஆனால் திடீரென அவர் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கேஆர் பிலிம்ஸ் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் நடிக்கயிருந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார்.
அதேசமயம், சாட்னாவின் தாயாரோ, என் மகள் கார்த்தியை திருமணம் எல்லாம் செய்யவில்லை. என் மகளை மூளை சலவை செய்து எங்களிடமிருந்து பிரித்துவிட்டார், என் மகளை மீட்டு எங்களிடம் தாருங்கள் என்று கதறினார்.
இந்நிலையில் சாட்னாவும், கார்த்தியும் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் தங்களது திருமணம் அடுத்தாண்டு, ஜனவரியில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர்.
இதுப்பற்றிய விபரம் வருமாறு... ‛‛அன்புடையீர் வணக்கம். கார்த்திக், சாட்னா டைட்டஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்தோம். இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டோம். வரும் 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் எங்களுடைய இரு குடும்பங்கள், சுற்றம், நட்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்றென்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் கோரும் கார்த்திக், சாட்னா டைட்டஸ்.
இவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.