பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
முழுவீச்சில் தயாராகி வரும் பக்தி படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா. சென்னை மேற்கு முகப்பேரில் குடிகொண்டுள்ள கனக துர்கா அம்மனின் மகிமையை சொல்லும் பக்திப் படம். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜே.ஜி.காளையப்பன், ஜோதி விநாயகாக சினிமா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம். இதில் புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளார். திவ்யா நாகேஷ், ஜான்விகா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன், நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா, ஸ்ரீஹரி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். என்.டி.சிவமனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சங்கர்ஜி இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சங்கர்ஜி கூறியதாவது: படத்தில் கனகதுர்காவின் மகிமையை சொல்லும் இரண்டு கதைகள் இடம்பெறுகிறது. ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் தோஷம் அவர்களை படாத பாடு படுத்தி விடுகிறது. விரதமிருந்து அம்மனை வேண்டுகிறார்கள். ஸ்ரீ கனகதுர்கா எப்படி அவர்களை காப்பாற்றினாள் என்பது ஒரு கதை.
திருமணமாகி ஹனிமூனுக்கு ஒரு ஜோடி செல்கிறார்கள். ஆனால் அந்த மாப்பிள்ளைக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. காதல் நிறைவேறாத அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.. பிறகு பேயாக வந்து அந்த புதுமணத் தம்பதிகளை வாழ விடாமல் தடுக்கிறாள். அவர்கள் ஸ்ரீ கனகதுர்கா அம்மனுக்கு விரதம் இருந்து எப்படி பேயிடம் இருந்து மீண்டார்கள் என ஒரு கதை. வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுத்துள்ளோம். என்கிறார் இயக்குனர் சங்கர்ஜி. படம் இந்த மாத இறுதியில் வெளிவருகிறது.