ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள படமான பாடிகார்ட் (தமிழில் காவலன்) தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதில் த்ரிஷாவின் தோழியாக நடித்தவர் ரேஷ்மா ரத்தோர். அதன் பிறகு ஹீரோயினாக 5 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். ஒரு மலையாளப்படத்திலும் நடித்து விட்டார். அடுத்த கட்டமாக அவர் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலமாக தமிழுக்கு வருகிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோயடியாக நடிப்பவர் தம்பிராமய்யாவின் மகன் உமாபதி. மனோபாலா , பாண்டியராஜன் , நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணாகரண் நடித்துள்ளார். மகனுக்காக தம்பி ராமய்யாவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் இன்பசேகரன் கூறியதாவது: ‛‛காமெடி கலந்த த்ரில்லர் படம். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். படத்தின் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை. தமிழில் நாங்கள் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்'' என்கிறார் இயக்குநர் இன்ப சேகரன்.