கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |
உடல்நலக்குறைவு காரணமாக நடிகை காந்திமதி இன்று காலமானார். அவருக்கு வயது 65. கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர். கரகாட்டக்காரன், மாணிக்கம், வால்டர் வெற்றிவேல், சின்னதம்பி பெரிய தம்பி, அகல் விளக்கு, ஆணழகன், அமைதிப்படை, அம்மன் கோவில் வாசலிலே, அன்பு தோழி, அத்தைமகள் ரத்தினமே, சிதம்பர ரகசியம், மண்வாசனை, காதல் ஓவியம், கும்பக்கரை தங்கையா, முத்து, ராசைய்யா, சிம்லா ஸ்பெஷல், உயிர் உள்ளவரை உஷா, இது நம்ம பூமி, தவசி, ஐயா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுவதாக அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார் காந்திமதியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.