ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மம்முட்டியுடன் 'குட்டி ஸ்ராங்' மற்றும் பஹத் பாசிலுடன் 'நெத்தொலி சிறிய மீனல்ல' ஆகிய படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த கமாலினி முகர்ஜி கடந்த 2014ல் வெளியான குஞ்சாக்கோ போபன் நடித்த 'கஸின்ஸ்' படத்தில் சில நிமிடங்களே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக நடித்து வருபவர் கெஸ்ட் ரோலில் நடிக்க காரணம் அந்தப்படத்தின் இயக்குனர் வைசாக். மோகன்லாலை வைத்து தான் இயக்கும் அடுத்த படத்தில் நீங்கள் தான் ஹீரோயின் என்று வாக்குறுதி கொடுத்து, சொன்னபடி இப்போது தான் இயக்கும் 'புலி முருகன்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் ஆக்கி வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார் வைசாக்.
இந்தப்படத்தில் கமாலினி முகர்ஜி தான் கதாநாயகி என்றாலும் இன்னொரு முக்கியமான கேரக்டரில் கவர்ச்சிப்புயல் நமீதாவும் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் வேட்டைக்காரராக நடிக்கும் மோகன்லால் காட்டின் அருகில் உள்ள கிராமத்தில் மனைவி காமலினி முகர்ஜி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருபவர்.. ஆனால் அதே பகுதியை சேர்ந்த கட்டழகி நமீதா, மோகன்லாலின் வீரத்திலும் அழகிலும் சொக்கிப்போய் அவ்வப்போது மோகன்லாலை பார்க்கும்போதெல்லாம் அவரிடம் நின்று ஜொள்ளுவிட்டு பேசுவாராம். இது காமலினி முகர்ஜிக்கு எரிச்சலை ஏற்படுத்த, நமீதாவை திட்டிவிட்டு மோகன்லாலை இழுத்துக்கொண்டு போவாராம்.. சீரியசான கதையில் இப்படி ஒரு ஜாலியான எபிசோடும் உண்டாம்.