4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? |
நடிகர் ஜெய்யுடன் காதல் ஏதும் இல்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ஹாலிவுட் நிறுவனமாக ஃபாக்ஸ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து முதன்முறையாக தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ் அவதரித்திருக்கும் படம் தான் "எங்கேயும் எப்போதும்". தன்னுடைய உதவியாளர் சரவணன் இயக்கிய இப்படம், வருகிற 16ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுசம்பந்தமான கடைசிகட்ட பிரஸ்மீட் கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், டைரக்டர் சரவணன், நடிகர்கள் ஜெய், சர்வானந்த், நடிகை அஞ்சலி, இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, "எங்கேயும் எப்போதும்" படத்தின் பாடல் காட்சிகளில், ஜெய்யுடன், நடிகை அஞ்சலி மிகநெருக்கமாக நடித்திருப்பது கண்டு பத்திரிக்கையாளர்கள், ஜெய்யுடன் காதலா...? இவ்வளவு ஈடுபாடோடு நடித்துள்ளீர்களே என கேட்டனர்.
அதற்கு அஞ்சலி, இந்த கேள்வியை கேட்டது யாரு? உங்க காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அப்படி காதல் ஏதும் இல்லை என்றார். விடாது நிருபர்கள் ஜெய்யிடமும், அஞ்சலி மீது காதல் பற்றிய உங்கள் பதில் என்ன? என்று கேட்க, ஜெய்யோ, உண்டு, இல்லை என்று தெளிவாக பதில் சொல்லாமல் குழப்பினார். உடன் அஞ்சலியிடம் சில நிருபர்கள் நீங்களோ, கேள்வி கேட்டது யார்? காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என்கிறீர்கள், ஆனால் ஜெய்யோ, காதலில் விழுந்தவர் மாதிரியே... எனக் கேட்கும் போது, குறுக்கிட்ட அஞ்சலி, அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். தொடர்ந்து காதல் பற்றிய கேள்வியை கேட்கவும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த, பி.ஆர்.ஓ., குறுக்கிட்டு, காதல் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கிறீர்களே, படத்தை பற்றி கேளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்தது ஜெய்-அஞ்சலி பற்றிய காதல் கேள்வி. இருந்தாலும் இறுதிவரை இருவருமே காதலை ஒப்புக்கொள்ளவும் இல்லை, ஆணித்தரமாக மறுக்கவும் இல்லை...!