ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'குக்கூ' படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த படம் - 'ஜோக்கர்'. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. நல்லகண்ணு உட்பட பல அரசியல் கட்சித்தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். பாராட்டு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வசூல்ரீதியாகவும் ஜோக்கர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜோக்கர் படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்துவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் பல ஊர்களில் சில திரையரங்குகளில் ஜோக்கர் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஜோக்கர் படம் பற்றி சமூகவலைதளங்களில் அவ்வப்போது எழுதி வருகின்றனர்.
இதன் காரணமாக 'ஜோக்கர்' திரைப்படத்தின் கதாநாயகனான மக்கள் ஜனாதிபதி மன்னர் மன்னன் ரசிகர்கள் நெஞ்சில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார். இங்கே வெளியானபோது, சில வெளிநாடுகளிலும் ஜோக்கர் படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், முதல்முறையாக ஜப்பான் நாட்டிலும் 'ஜோக்கர்' படம் திரையிடப்படவிருக்கிறது. வரும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ஜப்பானின் சிபா கென் நகரிலுள்ள திரையரங்கில் மதியம் 3 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது. இதன் மூலம் ஜப்பான் வாழ் தமிழ் ரசிகர்களை மன்னர் மன்னனை மகிழ்விக்கப்போகிறார்.