Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிக்கில் சந்தானம் நடிக்காதது ஏன்? இயக்குனர் ராஜேஷ் விளக்கம்

15 செப், 2016 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Rajesh-M-replied-why-santhanam-not-acted-in-My-film

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு (கிக்). ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்து இசை அமைக்கிறார், நிக்கி கல்ராணி, ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி மொட்டை ராஜேந்திரரன், சிங்கம்புலி நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். பங்கேற்ற மற்ற பிரபலங்கள் பெற்றுக் கொண்டார்கள். விழாவில் இயக்குனர் ராஜேஷ் எம்.பேசியதாவது:


இந்தப் படத்தின் டைட்டில் ஜி.வி.பிரகாஷ் சொன்னது. நான் வைத்த டைட்டில் அல்ல. கிக் என்பது கூட யதேச்சையாக அமைந்தது தான். படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சிகூட கிடையாது. என் மனதில் நீண்ட நாள் ஓடிக்கொண்டிருந்த ஒரு டிராவல் கதை. அதற்குள் காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் எல்லாமே இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட படம்தான் தயாரிப்பளர் எதையும் பெரிதாக செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பியதால் பெரிய பட்ஜெட் படமாகியிருக்கிறது.


உங்கள் படத்தில் சந்தானம் இல்லையே என்று கேட்கிறார்கள். அவர் இப்போது ஹீரோவாகி விட்டார். அவர் லெவல் வேறு. அழுது அடம்பிடிச்சு நீங்க நடிச்சு தரணும் என்ற கேட்டிருந்தால் நிச்சயம் நடித்திருப்பார். ஆனால் அவருக்கு தர்மசங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. அவரது இடத்தை ஆர்.ஜே பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி கூட்டணி நிரப்பும். இவ்வாறு ராஜேஷ் பேசினார்.


விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர் சசி, நடிகைகள் ஆனந்தி, நிக்கி கல்ராணி, நடிகர் ஜி.வி.பிரகாஷ், கயல் சந்திரன், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி. தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர்கள் கதிரேசன், தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in