Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஷ்மோராவுக்காக பேஸ் ஸ்கேன் டெக்னாலஜியில் 3வது கார்த்தி உருவாகிறார்

13 செப், 2016 - 15:47 IST
எழுத்தின் அளவு:
3rd-Karthi-in-Kashmora

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் காஷ்மோரா . இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா இளவரசியாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார். நிகழ்காலம், வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் பேண்டசி கதை. இதில் நிகழ்கால இளைஞர் காஷ்மோராகவும், வரலாற்றுகால கொடூர மன்னன் ராஜ்நாயக்காகவும் கார்த்தி நடிக்கிறார்.


இந்த இரண்டு கேரக்டர்கள் தவிர மூன்றாவது கேரக்டர் ஒன்று கார்த்திக்கு இருக்கிறது. அதை படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். சிவாஜி படத்தில் மொட்டை பாஸ் கேரக்டர் மாதிரி, எந்திரன் படத்தில் கொடூரமான ரெட்சிப் எந்திரன் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததை போன்று கார்த்தியின் மூன்றாவது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.


ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் பேஸ் ஸ்கேன் டெக்னாலஜி மூலம் இந்த கேரக்டரை உருவாக்கி வருகிறார்கள். கார்த்தியின் முகத்தை 360 டிகிரி கோணத்திலும் பல்வேறு உணர்வுகளை காட்டவைத்து படம் எடுத்து பின்னர் அதனைக் கொண்டு கிராபிக்சிலேயே ஒரு கேரக்டரை உருவாக்குவது. எந்திரன் படத்தில் சிட்டி கேரக்டரும், மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இன்னொரு சூர்யா கேரக்டரும் இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதேப்போல உருவாகி வருகிறது கார்த்தியின் கேரக்டர். கோடிக் கணக்கில் செலவு பிடிக்கும் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது.


காஷ்மோரா வில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் 30 நிமிடங்கள் போர் காட்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டிலும், மும்பை சென்னை, ஐதராபாத்திலுமாக 18 இடங்களில் நடந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in