சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2014ம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய்-மோகன்லால், காஜல்அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் ஜில்லா. மோகன்லாலைப் போலவே கேரளாவில் விஜய்க்கும் ரசிகர்கள் இருப்பதால், தமிழ்நாட்டைப் போன்று கேரளாவிலும் ஜில்லா படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை ஓணம் பண்டிகை என்பதால், மீண்டும் ஜில்லா படத்தை கேரளாவில் வெளியிடுகிறார்களாம்.
ஓணம் பண்டிகையையொட்டி பல மலையாள படங்கள் வெளியாகும் நிலையில், விஜய் ரசிகர்களுக்காக சில முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்களில் ஜில்லா வெளியாகிறதாம். அதோடு ஜில்லா வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலுமே டிக்கெட்டு முன்பதிவு சில மணி நேரங்களிலேயே விற்று தீர்த்து விட்டதாம். அதனால், நாளை வெளியாகும் மலையாள படங்களைப்போலவே விஜய்யின் ஜில்லா படம் ஓடும் தியேட்டர்களிலும் கட்அவுட், தோரணம் என்று விஜய் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியுள்ளார்களாம்.