ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இருமுகன் படத்தை அடுத்து 'சாமி 2' படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. லேட்டஸ்ட் தகவல் வேறு மாதிரி இருக்கிறது. சாமி-2 படத்துக்கு முன் பிரம்மன் இயக்குநர் சாக்ரடீஸ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் விக்ரம். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் இருமுகன் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வர இருக்கிறார் விக்ரம்.
இந்த பணிகளுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் சாமி 2வில் நடிக்க திட்டமிட்ட விக்ரம் தற்போது தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். அதாவது, சாமி-2 படத்துக்கு முன்பாக தான் நடித்து கிடப்பில் போடப்பட்ட கரிகாலன் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தாராம் விக்ரம். கடைசியில், சசிகுமாரை வைத்து பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
கதாநாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சின்ன பட்ஜெட்டில் முழுக்க சென்னையிலே முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப்படத்தை முடித்துவிட்டு தான் சாமி 2 படத்துக்காக உடலமைப்பை மாற்றி நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம்.
சாமி 2 படத்தை இருமுகன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவிருக்கிறார். சாக்ரடீஸ் இயக்கும் படத்தை தயாரிப்பது விக்ரம்தான் என்றும் தகவல் அடிபடுகிறது. அவரே தயாரிப்பாளர் என்பது வெளியே தெரியாமல் இருக்க தன்னுடைய தோழி பெயரை பயன்படுத்துவதாகவும் தகவல்.