மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் கரண் ஜோஹர். தற்போது இவர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்' .சில தினங்களுக்கு முன் ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் இடையே இருந்த காதல் காட்சிகள் எல்லோராலும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து கரண் ஜோஹர் மற்றும் ஷாரூக்கான் தயாரிப்பில் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கத்தில், அலியா பட், அலி ஜாபர், ஆதித்யா ராய் கபூர், குணால் கபூர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் டியர் ஜிந்தகி'. இந்தப்படத்தில் ஷாரூக் கான் டாக்டராக சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். டியர் ஜிந்தகி' படத்தின் டிரைலர், ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்துடன் வெளியாகும் என்று கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
‛ஏ தில் ஹே முஷ்கில்' அடுத்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகும் என்றும், டியர் ஜிந்தகி படம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.