ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் பார் பார் தேக்கோ, பிரிக்கி அலி ஆகிய படங்கள் கடந்த வாரம் ரிலீசாகின. ஆனால் இந்த இரு படங்களுமே ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தோல்வி அடைந்தன. அதிலும் பார் பார் தேக்கோ படம் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளன்றே எதிர்பார்த்த ரூ.6 கோடி வசூலுக்கும் கூடுதலாக ரூ.6.81 கோடி வருமானம் பார்த்தது. அதே சமயம் பிரிக்கி அலி படம் முதல் நாளன்று ரூ.4 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெறும் ரூ.2.55 கோடிகளை மட்டுமே வசூலித்தது. பார் பார் தேக்கோ படம் மல்டிபிளக்ஸ் திரைகளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூலை பெற்றிறருந்த போதிலும், தனி திரைகளில் வசூலில் தோல்வியையே சந்தித்துள்ளது. பார் பார் தேக்கோ ரூ.50 கோடி செலவிலும், பிரிக்கி அலி ரூ.20 கோடி செலவிலும் எடுக்கப்பட்டது. இவ்விரு படங்களும் பட்ஜெட் தொகை அளவிற்காவது வசூலை பார்க்குமா என்பது சந்தேகம் தான் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.