ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்நாடு அரசு விருது பெற்ற பேபி ஷாம்லி அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்தும் தலா ஒரு மாநில அரசு விருதுகளை பெற்றார். ஒருகட்டத்தில் நடிப்பை நிறுத்தி விட்டு படிப் பில் இறங்கினார். பல வருட இடைவெளிக்குப்பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுக்க பல கதைகள் கேட்டு தனுஷின் கொடி படத்தில் முதலில் கமிட்டானார். ஆனால், பின்னர் அதே படத்தில் முக்கிய ஹீரோயினாக திரிஷாவும் இருக்கிற விசயமறிந்த ஷாம்லி, அந்த படத்தில் தனக்கு பர்பாமென்ஸ் பண்ணு வதற்கு பெரிதாக வாய்ப்பு இருக்காது என்று விலகினார்.
அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி படத்தில் சிங்கிள் நாயகியகாக கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார் ஷாம்லி. இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் விக்ரம்பிரபுவும், ஷாம்லியும் அதிக இயல்பாக நடித்திருக்கும் நிலையில், ஒரு லிப்-லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளதாம். அந்த காட்சியில் நடிக்க ஷாம்லி ரொம்பவே தயங்கினாராம். ஆனால் அந்த காட்சி அவசியம் தேவை என்று டைரக்டர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பின்னர் நடித்தாராம் ஷாம்லி. அந்த காட்சியில் தயங்கியபடி அவர் நடித்தபோதும் ரொம்ப இயல்பாக படமாக்கப்பட்டி ருப்பதாக சொல்கிறார்கள்.