ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த திரிஷாவுக்கு பின்னர் வாய்ப்புகள் குறையவே, தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள தயாரானார். ஆனால் அந்த திருமணம் நடைபெறவில்லை. அதையடுத்து, அவரும் நயன்தாரா பாணியில் கதையின் நாயகியாக நடிக்க தயாரானார். முதலில் நாயகி படத்தில் நடித்தவர் இப்போது மோகினி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து மேலும் ஒரு ஹாரர் படத்திலும் நடிக்கயிருக்கும் திரிஷா, அடுத்தபடியாக பெயரிடப்படாத ஒரு படத்தில் 5 வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் நாசர், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்தை சரத்குமார் நடித்த ரகசிய போலீஸ் படத்தை இயக்கிய இளவரசன் இயக்குகிறாராம். தற்போது மோகினி படத்திற்காக லண்டனில் முகாமிட்டி ருக்கும் திரிஷா, அதை முடித்ததும் இந்த புதிய படத்தில் நடிக்கிறாராம்.
மேலும், முதன்முறையாக 5 வேடங்களில் நடிக்கும் திரிஷா, இரண்டு கெட்டப்புகளுக்காக உடலை வருத்தி நடிக்கிறாராம். அதாவது உடல் எடையை குறைத்து, அதிகப்படுத்தி என தன்னை வித்தியாசப்படுத்தி காட்டப்போகிறாராம். இப்படத்தில் நடிக்க திரிஷாவுக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கிறார்களாம். மேலும், அவரது காஸ்டியூம்களுக்காக 25 லட்சம் செலவிடப்படுகிறதாம்.