மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்திற்கு முன்பு சிருஷ்டி டாங்கே நடித்த கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம், வில்அம்பு, நவ ரச திலகம், ஜித்தன்-2 பல படங்கள் வெளியாகின. ஆனால் படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் சிருஷ்டி டாங்கேவின் மார்க்கெட் மந்தமாக இருந்து வந்தது. ஆனால் தர்மதுரை படத்தில் அவர் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்தபோதும் அவரது பர்பாமென்ஸ் கோலிவுட் டைரக்டர்களை கவர்ந்து விட்டது. அதனால் தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சிருஷ்டி டாங்கே.
அந்தவகையில், தற்போது காலக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு மற்றும் எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் என பல படங்களில் பிசியாகி விட்டார். அதோடு நடித்தால் சிங்கிள் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் சிறிய கேரக்டராக இருந்தாலும் தயங்காமல் ஏற்றுக்கொள்கிறார். அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாணியில் சிறிய கேரக்டராக இருந்தாலும் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் நடிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார் சிருஷ்டிடாங்கே. இதனால் இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த கோலிவுட் டைரக்டர்களின் கவனம் இப்போது சிருஷ்டி பக்கம் திரும்பியிருக்கிறது.