ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவிரி விவகாரத்தால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இருமாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா ஆகியோர் கன்னடக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் தயார் என்று கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி மணிரத்னமும் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னடகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது போன்ற ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சுஹாசினியை இங்குள்ளவர்கள் பலரும் வசை பாட தொடங்கினர். இதையடுத்து இந்த செய்தி சுஹாசினியின் கவனத்திற்கு வர உடனடியாக தன் டுவிட்டர் பக்கத்தில் தான் எந்த கருத்தும் சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஹாசினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு அரசியல் விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று டுவீட்டாகவும், வாட்ஸ்அப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது, பொய்யானது. எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது.
காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் நான் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்தவும் என்று கூறியுள்ளார்.