தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து சுமார் நான்கு மாதங்களாகி விட்டது. இறப்பதற்கு முன் அவர் நடித்து முடித்த படங்கள் கடந்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாகின. கலாபவன் மணி நடிக்க ஒப்புக்கொண்ட இன்னும் ஒன்றிரண்டு படங்கள் அப்படியே முடங்கிப்போயின. ஆனால் அவற்றில் 'டபேதார்' என்கிற படத்தை மட்டும் நட்சத்திரங்களை மாற்றி படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் கலாபவன் மணியும் அனன்யாவும் நடிப்பதாக திட்டமிடப்பட்டு 2014ல் நடைபெற்ற அந்தப்படத்தின் பூஜையில் எல்லாம் கலாபவன் மணி கலந்துகொண்டார்.
இப்போது கலாபவன் மணி இறந்துவிட்டதால் டினி டாம் என்பவரை கதாநாயகன் ஆக்கி படபிடிப்பை நடத்தியுள்ளார்கள்.. அதேபோல அனன்யாவையும் மாற்றிவிட்டு மாளவிகா என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஜான்சன் எஸ்தப்பன் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைtத்திருக்கிறார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.. மிகவும் ஆச்சர்யமான விஷயமாக கேர முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தப்படத்தின் இசையை வெளியிட்டுள்ளார்.. இசைஞானி இளையராஜாவுக்கும் மறைந்த நடிகர் கலாபவன் மணிக்கும் கெளரவம் சேர்ப்பதற்காகவே இந்த விழாவில் கேரளா முதலமைச்சர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.