ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் சிம்புவுக்குப் பிறகு அடுத்து ஒரு இளம் நடிகர் இயக்குனராக மாறியிருக்கிறார். அவர் தனுஷ் என்பது இன்று காலை முதல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 'வல்லவன்' படத்தை சிம்பு இயக்கும் போது அவருக்கு வயது 23. ஆனாலும், அதற்கு முன்பாகவே 'மன்மதன்' படத்தை சிம்பு தான் இயக்கினார் என்ற ஒரு பேச்சு உண்டு. அந்தப் படத்தை இயக்கிய ஏ.ஜே.முருஹன்-ஐ எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது தெரியாது. தமிழ்த் திரையுலகில் குறைந்த வயதில் நடிகராக இருந்து இயக்குனராக மாறியதில் சிம்பு தான் முதலில் இருப்பார்.
சிம்புவுக்குப் போட்டி என்று கருதப்பட்ட தனுஷ், படிப்படியாக தன்னுடைய திறமையை உயர்த்திக் கொண்டு பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷிடம் இயக்கும் திறமை புதிதாக வந்ததல்ல. அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவும் இயக்குனர்தான், அண்ணன் செல்வராகவனும் இயக்குனர்தான். அதனால், தனுஷும் இயக்குனரானதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அவர் இயக்குனராக மாற எடுத்துக் கொண்ட காலம்தான் அதிகம்.
எந்த ஒரு நடிகருக்குள்ளும் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். என்னதான் நடிகராக பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு, அதிக ரசிகர்களைப் பெற்றிருந்தாலும் ஒரு இயக்குனரைத்தான் 'க்ரியேட்டர்' ஆகப் பார்ப்பார்கள். இயக்குனர்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு.
தனுஷ் தன்னுடைய முதல் படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ராஜ்கிரணை நாயகனாக போட்டிருப்பது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல, தனுஷுக்கு நெருக்கமான யுவன் அல்லது அனிருத் இசையமைக்கமால் ஷான் ரோல்டன் இசையமைப்பது அடுத்த ஆச்சரியம். முன்னாடியே எந்த கிசுகிசுவும் வராமல் திடீரென தன்னுடைய இயக்கம் பற்றிய அறிமுகத்தை தனுஷ் அறிவித்திருப்பது மற்றுமொரு ஆச்சரியம்.
கடந்த வாரம்தான் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அந்த ஆச்சரியமே இன்னும் மறையாத நிலையில் 'பவர் பாண்டி' படத்தை இயக்கப் போவது மிகப் பெரிய ஆச்சரியம். நடிகராக தேசிய விருது பெற்றது போல, தயாரிப்பாளராக தேசிய விருது பெற்றது போல இயக்குனராகவும் தரமான படங்களைத் தந்து தேசிய விருதுகளை தனுஷ் பெற வாழ்த்துகள்.