14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. பெரும்பாலும் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போன இம்ரான், அடுத்தப்படியாக ராஸ் படங்களின் வரிசையில் வெளிவர இருக்கும் ‛ராஸ் ரீ-பூட்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இம்ரான். சமீபத்தில் புரமோஷனின் போது இந்தியாவில் முஸ்லீம்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி இம்ரான் ஹாஸ்மி கூறியிருப்பதாவது... ‛‛இந்தியாவில் பல தரப்பட்ட மதத்தினரும், ஜாதியினரும் வாழ்கிறார்கள். இங்கு எந்த பிரச்னையும் இல்லை, அனைவரும் மத நல்லினக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது பெரிய சாதனையான ஒன்று. மேலும் இந்தியாவில் முஸ்லிம்கள் கெளரவமாகவும், நல்லமுறையிலும் நடத்தப்படுகிறார்கள், இதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.