ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் 'நிர்மலா கான்வென்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“ஒரு நல்ல நாளில் நான் அனைத்தையும் வெளிப்படையாக விவரமாகச் சொல்கிறேன்,” என பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். சமந்தா ஏற்கெனவே நாக சைதன்யா குடும்பத்தினருடன் விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். அவரை இப்போதே தங்கள் வீட்டுப் பெண்ணாக நாகார்ஜுனா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதே போல நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் மகனான அகில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிஸினஸ்மேனின் மகளைக் காதலிப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போது நாக சைதன்யா, அகில் ஆகியோரது திருமணங்கள் ஒரே நாளில் நடக்குமா அல்லது முதலில் நாக சைதன்யாவுக்குத் திருமணம் நடக்குமா என டோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்க சம்மதித்துள்ள படத்திலிருந்து விலகிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.