14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மருது படத்தை அடுத்து சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் கத்திச் சண்டை. இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா, வடிவேலு, சூரி என பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டது. அதனால் கடந்த சில நாட்களாக டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. முதலில் தமன்னா சம்பந்தப்பட்ட டப்பிங் பேசிய நிலையில், தற்போது வடிவேலுவின் காமெடி ட்ராக் டப்பிங் நடந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக, தான் காமெடியனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் என்பதால் கத்திச்சண்டை படத்தின் காமெடி காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம் வடிவேலு. படப்பிடிப்பு நடந்தபோது தனக்கான காட்சிகள் அனைத்தையும் படமாக்கிய பிறகு சில காட்சிகள் திருப்தியாக இல்லாததால் அந்த காட்சிகளை விஜிபி கோல்டன் பீச்சில் மீண்டும் படமாக்கினாராம் வடிவேலு. மேலும், தற்போது அவர் நடித்த காட்சிகளுக்கான டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். தன்னுடன் நடித்த காமெடியன்களும் சிறப்பாக பேச வேண்டும் என்பதால் தான் பக்கத்தில் இருந்தே அவர்கள் பேசுவதை கண்காணித்து வருகிறாராம் வடிவேலு