சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சோனாக்சி சின்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளியான அகிரா படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரீலிசாக அன்றே ரூ.5.15 கோடியை சமூலித்துள்ளது. இரண்டாவது நாளான சனிக்கிழமையும் ரூ.5 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளது. மொத்தமாக ரிலீசான 2 நாட்களில் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. இது ராணி முகர்ஜியின் மர்தாணி மற்றும் அனுஷ்கா சர்மாவின் என்ஹச் 10 படங்களை விட அதிகமான வசூல் தொகையாகும். மர்தாணி படம் முதல் நாளில் ரூ.3.46 கோடியையும், என்ஹச் 10 படம் ரூ.3.35 கோடியையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடர்ந்து வரப் போகும் வார நாட்களில் அகிரா படத்தின் வசூல் வர்த்தக ரீதியாக பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.