ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். இதுநாள் வரை பாலிவுட்டி நடிகையாக இருந்தவர் இப்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். இவர் தன்னுடைய முதல் மராத்திய தயாரிப்பாக ‛வெண்டிலேட்டர்' என்ற படத்தை தன்னுடைய பர்புல் பெப்பில் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். ராஜேஷ் மாபுஷ்கர் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், "வெண்டிலேட்டர் " படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் பிரியங்கா .
அத்துடன்... "எனது முதல் மராத்திய படத்தின் போஸ்டரை வெளியிட்டதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பர்புல் பெப்பில் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு என் வாழ்த்துகள். கணபதி பப்பா மோரியா" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை, தயாரிப்பாளரையும் கடந்து ஒரு பாடகியான பிரியங்கா, இப்படத்தில் ஒரு பாடலும் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.