ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி திரையுலகில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில், அமீர் கான் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்துள்ளார் . இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல்" படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். இதையடுத்து தக் எனும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே அமீர்கான், அத்வைத் சந்தன் இயக்கும் படத்தில், ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஷூட்டிங் துவங்கி விட்டது. இந்தப்படத்திற்காக ‛டங்கல்' இயக்குநர் நிதேஷிடம் 8 நாட்கள் அனுமதி வாங்கி தன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வருகிறார் அமீர். இப்படத்திற்கு ‛சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‛சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படம் அமீர்கானின் சொந்த தயாரிப்பாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.