ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே என்று 24 மணி நேரம் படத்தில் சத்யராஜ் ஒரு டயலாக் பேசுவார். இந்த வசனம் இப்போது யாருக்குப் பொருந்தும் என்றால்... விஜய் ஆண்டனிக்குத்தான். கிருஸ்தவரான விஜய் ஆண்டனி சலீம் என்ற இஸ்லாமிய இளைஞராக ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சலீம் என்ற பெயரிலேயே ஒரு படத்தை தயாரித்து அதில் மீண்டும் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
எதற்கு இந்த பீடிகை? விஷயம் இருக்கிறது. 'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆன்டனி 'சைத்தான்', 'எமன்' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'சைத்தான்' பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இப்படம் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் 'எமன்' படத்தின் வேலைகளும் படு சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. விஜய் ஆன்டனி நடிப்பில் 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி வரும் 'எமன்' படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள 'என் மேல கையை வச்சா காலி...' என்று துவங்கும் சிங்கிள் டிராக்கை விநாயகசதுர்த்தியன்று வெளியிடவிருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜய் ஆன்டனி நடித்த 'சலீம்' படம் வெளியானது 2014 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தான்! 'சலீம்' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் விநாயகசதுர்த்தி சென்டிமென்ட் இப்போது விஜய் ஆன்டனியின் எமனிலும் தொடர்கிறது.