சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்டது சில மாதங்களுக்கு முன்புதான். குற்றமே தண்டனை படம் ஆரம்பிக்கப்பட்டது சில வருடங்களுக்கு முன்பு. பிறகு எப்படி குற்றமே தண்டனை ஸ்வாதி கொலையை பிரதிபலிக்கும் என்ற கேள்வி எழுவது இயல்பே.
நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்டபோது அந்த காட்சியை ஒரு பத்து பேராவது நின்று பார்த்திருப்பார்கள். யாருமே காப்பாற்ற வரவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இப்படி ஒரு கொலையை பார்த்தேன் என்றுகூட யாரும் போலீசுக்கு சொல்லவில்லை. மற்ற நண்பர்களிடமும் சொல்லவில்லை. ஆனால் யாரோ ஒருவருக்கு அந்த கொலையை தடுக்காமல் போய்விட்டோமே, போலீசில் சாட்சி சொல்லி குற்றவாளியை காட்டிக் கொடுக்காமல் போய்விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இருக்கும்.
குற்றமே தண்டனை படமும் அதைத்தான் சொல்ல வருகிறது. ஸ்வாதி கொலை ரயில் நிலையத்தில் நடந்தது என்றால் குற்றமே தண்டனையில் வரும் கொலை நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு காலனியில் நடக்கிறது. காலனியில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேசை ஒருவன் ஒருதலையை காதலிக்கிறான். அவன் காதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு நாள் அவளை அவள் தங்கியிருந்த வீட்டுக்கே சென்று கொல்கிறான். அதை பார்க்கும் ஒரே சாட்சி விதார்த். ஆனால் அவர் தேவையில்லாத பிரச்சினை நமக்கு எதற்கு என்று ஒதுங்கிப் போகிறார். கொலையை தடுக்கவும் இல்லை. கொலையாளி யார் என்று தெரிந்தும் அதை போலீசிடம் சொல்லவும் இல்லை. ஆனால் அப்படி செய்ய தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை கொல்கிறது. அதிலிருந்து மீண்டு வர அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.
காக்கா முட்டை மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். விதார்த் தயாரித்துள்ளார். வருகிற செப்டம்பர் 2ந் தேதி படம் வெளிவருகிறது. அனைத்து ஏரியாக்களும் விற்று விட்டது. விதார்த் லாபம் பார்த்து விட்டார். மக்கள் அளிக்கும் ஆதரவும், வரவேற்பும் என்ன என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும்.




