14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அறிமுகமானதை அடுத்து தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக 'ஒக லைலா கோசம்' படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் மிகச் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் மீண்டும் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க, 'முகுந்தா' படத்தில் நடித்தார். அந்தப் படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது. அடுத்து தமிழிலும், தெலுங்கிலும் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்தார் பூஜா.
இதனிடையே, பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அஷுதோஷ் கௌரிக்கர் 'மொகஞ்சதாரோ' படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். இந்தப் படம் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அவரின் ராசியா என்னமோ தெரியவில்லை, 'மொகஞ்சதாரோ' படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து தோல்வியைத் தழுவியது.
நல்ல உயரமும், அழகான தோற்றமும் கொண்ட பூஜாவுக்கு இந்தியத் திரையுலகின் மூன்று முக்கிய உலகங்களான தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றில் ராசியில்லாத நடிகை எனப் பெயரைப் பெற்றுவிட்டார். அந்த ஒரு காரணத்தால் அவர் அடுத்து நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்ட அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் தெலுங்குப் படத்திலும் அவரை தற்போது ஒப்பந்தம் செய்யாமல் தவிர்த்துவிட்டார்கள். சினிமா உலகம் சென்டிமென்ட்டுக்குப் பெயர் போனது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.