சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் முத்துராமலிங்கம். அவருடன் ப்ரியாஆனந்த், பிரபு, நெப்போலியன், ராதாரவி, ரேகா, விஜிசந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். மறைந்த பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதியுள்ளார். ராஜதுரை இயக்கியுள்ள இந்த படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிந்து வருகிற வியாழக்கிழமை முதல் டப்பிங் பணிகள் தொடங்குகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் ராஜதுரை கூறும்போது, இந்த படத்திற்கு முத்துராமலிங்கம் என்று டைட்டீல் வைத்திருப்பதால் பலரும் இது முத்துராமலிங்க தேவர் பற்றிய கதை என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த படம் ஒரு அம்மா-மகன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. இதில் அம்மாவாக விஜி சந்திரசேகரும், மகனாக கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். அந்த வகையில், சிவாஜி-கமல் நடித்த தேவர் மகன் படம் எப்படி அப்பா- மகன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருந்ததோ அதேபோல் இந்த படம் அம்மா-மகன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் இந்த முத்துராமலிங்கம் படத்தை இன்னொரு தேவர்மகன் என்றுகூட சொல்லலாம்.
மேலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் கெளதம் கார்த்தியின் ஓப்பனிங் பாடலுக்கான டியூனை உருவாக்கியதும், அந்த பாடலை யாரை வைத்து எழுதலாம் என்றபோது, இந்த சூழலுக்கு பஞ்சு அண்ணன்தான் சரியாக எழுதுவார். என்னை அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்த அவர், என் இசையில் பாடல் எழுதி 14 ஆண்டுகளாகி விட்டது என்று சொல்லி அவரை அழைத்து முதல் பாடலை எழுத வைத்தார். அந்த பாடலை தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா -என்று தொடங்கி ஒரு மணிநேரத்தில் அற்புதமாக எழுதிக்கொடுத்தார் பஞ்சு அருணாசலம் சார். அடுத்து அந்த பாடலை யாரை வைத்து பாட வைக்கலாம் என்றபோது நான் எஸ்.பி.பியின் பெயரை சொன்னேன். ஆனால் இளையராஜாவோ, இன்னொருத்தர் இருக்கிறார் அவர் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி கமல் சாரை சொன்னார். அதேபோல் அவரும் வந்து ஒரே மணி நேரத்தில் அந்த பாடலை பாடிக்கொடுத்தார். மேலும், இந்த முத்துராமலிங்கம் படத்தின் 5 பாடல்களையுமே பஞ்சு அருணாசலம் சார்தான் எழுதியிருக்கிறார். அது இந்த படத்தின் சிறப்பாகும்.
ஆக, மிகச்சிறந்த கலைஞர்களின் கூட்டணியில் இந்த முத்துராமலிங்கம் படம் சிறப்பாக வந்திருக்கிறது. வருகிற வியாழக்கிழமை முதல் இறுதிகட்ட பணிகள் தொடங்குகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஆடியோ வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் ராஜதுரை.