மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி மூலம் பிர பலமானவர் சூரி. தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடியனாகி விட்டார். சூரியின் கால்சீட்டுக்காக பல முன்னணி நடிகர்களின் படங்களே வெயிட்டிங்கில் உள்ளன. ஆக, இதற்கு முன்பு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து வந்த சூரி, இப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். குறிப்பாக, படம் முழுக்க ஹீரோக்களுடன் வரும் படங்களை உடனே டிக் அடித்து விடுகிறார்.
அதோடு, சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு சூரியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை தனது பிறந்த நாளை சத்தமில்லாமல் கொண்டாடி வந்த சூரி, சமீபத்தில் தனது பிறந்த நாளை எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விமரிசையாக கொண்டாடினார். அதோடு சூரிக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை, கோவை, சேலம், மதுரை ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதில் சென்னை ஏரியா ரசிகர்கள், இந்த ஆண்டு உங்கள் தரிசனம் கிடைக்கவில்லை. அடுத்து ஆண்டு பிறந்த நாளில் கண்டிப்பாக எங்களுக்கு தரிசனம் தர வேண்டும் தலைவா -என்று பல ஏரியாக்களில் சூரியின் ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.